நாயகியாகிறார் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை!

  • IndiaGlitz, [Wednesday,March 24 2021]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய வெற்றி படங்களில் ஒன்று ’துப்பாக்கி’. கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தவர்களில் ஒருவரான சஞ்சனா சாரதி. இவர் தற்போது நாயகி ஆகியுள்ளார். நவீன் சந்திரா என்ற தெலுங்கு நடிகர் நடித்து கொண்டிருக்கும் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சஞ்சனா சாரதி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் கேரக்டர் தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்றும் இது ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர் படம் என்றும் நான் நவீன் ஜோடியாக நடிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்றும், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெலுங்கில் நான் அறிமுகமாகும் முதல் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஞ்சனா ஏற்கனவே தமிழில் உருவாகி வரும் ’நினைவோ ஒரு பறவை’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ரிதுன் என்பவர் இயக்கி வரும் இந்தப் படம் ஒரு காதல் திரைப்படம் என்றும் இந்த படத்தில் நடித்து வரும் வயதான தம்பதிகளின் இளம் பருவ காதலர்களாக தானும், ஹரி பாஸ்கரும் நடித்துள்ளதாகவும் சஞ்சனா தெரிவித்துள்ளார்.

’துப்பாக்கி’ படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அனைத்துமே தங்கை வேடங்களாக இருந்ததால் நல்ல கேரக்டர் வரும் வரை காத்திருக்க முடிவு செய்ததாகவும் எனது காத்திருப்புக்கு பயன் கிடைத்து வகையில் தற்போது நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் சஞ்சனா தெரிவித்துள்ளார்.

More News

சிவகார்த்திகேயன் படத்தை இயக்க போகிறேனா? கே.வி.ஆனந்த் விளக்கம்!

கோ, அயன் உள்பட ஒருசில சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், தற்போது அடுத்த படத்திற்காக தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்தது.

'அண்ணாத்த' ரஜினியை சந்தித்த லெஜண்ட் சரவணன்! வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு!

பாஜக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் காணும் நடிகை குஷ்பு தற்போது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட...! கலாய்த்து தள்ளிய விந்தியா...! அதிரும் மதுரை...!

"ராகுலுக்கு பிரதமர் கனவு, உதயநிதிக்கு முதல்வர் கனவு"- இதற்கு இவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க என அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சாரத்தில்  கூறியுள்ளார். 

2021 தமிழக சட்டமன்றதேர்தலில் களமிறங்கிய அரசியில் வாரிசுகள்...! 

வாரிசு அரசியல் என்பது வாழையடிவாழையாக  நடந்துவருவது  நமக்கு தெரிந்த ஒன்னுதான்.