விஜய்யின் தவெக நிர்வாகிகள் அறிவிப்பு.. தமிழ் தயாரிப்பாளர், இயக்குனருக்கு முக்கிய பதவி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில் தமிழ் நடிகர் மற்றும் இயக்குனருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அவரது கட்சி போட்டியிட உள்ளது. இந்த நிலையில் தவெக கட்சி நிர்வாகிகளை அவர் தேர்வு செய்து வந்த நிலையில் சற்றுமுன் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் நிர்வாகிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிர்மல் குமாருக்கு துணைப் பொதுச் செயலாளர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடக பிரிவு பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விஜய்யின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான ஜெகதீசுக்கு தலைமை கழக இணை பொறுப்பாளர் வழங்கபள்ளப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ராஜ் மோகனுக்கு கழக கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் அறிவித்துள்ள நிர்வாகிகளை முழு விவரங்கள் இதோ:
1. திரு. ஆதவ் அர்ஜுனா B.A. (Political science)
தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
2. திரு. CTR. நிர்மல் குமார் B.E., LLB.
துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)
3. திரு. P.ஜெகதீஷ்
தலைமைக் கழக இணைப் பொருளாளர்
4. திரு. A.ராஜ்மோகன்
கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்
5. திரு. லயோலா மணி (எ) A.மணிகண்டன் M. A.
கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
6. பேராசிரியர் திரு. A.சம்பத்குமார் MBA., M.Phil., Ph.D.
கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
7. திருமதி. J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed.
கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
8. திரு. S.வீரவிக்னேஷ்வரன் B.E.
செய்தித் தொடர்பாளர்
9. திரு. S.ரமேஷ் B.E.
இணைச் செய்தித் தொடர்பாளர்
10. திரு. R.ஜெயபிரகாஷ் M.E., Ph.D.
தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
11. திரு. A.குருசரண் DCE.
தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
12. திரு. R.J.ரஞ்சன் குமார் B.E
தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
13. திரு. திரு. R.குருமூர்த்தி BBA.
சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
14. திரு. R. ராம்குமார் BCA.
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
15. திரு. P. வெங்கடேஷ் D.EEE., BE (EEE),
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
16. திரு. R.நிரேஷ் குமார்
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
17. திரு. S.அறிவானந்தம் M.A., M.Ed.
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
18. திரு.B.விஷ்ணு Dip.
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
19. திருமதி. A.ஃப்ளோரியா இமாக்குலேட் B.A.
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
— TVK Vijay (@tvkvijayhq) January 31, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments