ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய்யின் தவெக போட்டியிடுகிறதா? முக்கிய அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று தான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தொகுதியில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதாகவும், அதிமுக, பாஜக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் போட்டியிடாது என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் சற்று முன் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும். அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழகத்தில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்.
— TVK Party Updates (@TVKHQUpdates) January 17, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com