close
Choose your channels

விஜய் கட்சி இன்னொரு பாஜக.. தவெகவில் இருந்து விலகிய இன்ஸ்டா பெண் பிரபலம்..!

Friday, May 23, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

"விஜய்யின் கட்சி இன்னொரு பாஜக எனக் கூறி, அந்தக் கட்சியில் இருந்த இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"தமிழக வெற்றி கழகத்தில் ஒரு வருட காலம் பயணம் செய்திருந்தேன். அந்த கட்சியை பொறுத்தவரை, இளைஞர்களுக்கான அரசியல் செய்வார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அதனால்தான் நான் உள்பட நிறைய இளைஞர்களும், இளம் பெண்களும் அந்தக் கட்சியில் சேர்ந்தோம். ஆனால் எங்களுக்கு அதிருப்தி தான் மிச்சமாயிற்று.

இளைஞர்களுக்கான அரசியல் அந்தக் கட்சியில் அது சுத்தமாக இல்லை. எனவே, நான் அந்தக் கட்சியிலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளேன்.

மாண்புமிகு மேற்கு மண்டலத் தளபதி செந்தில் பாலாஜி முன்னிலையில், திமுகவில் இணைந்து கொண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை, அது இன்னொரு பாஜக என்பது தான் உண்மை.

இன்று முதல், இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் வழியாக, என்னுடைய மக்கள் பணியை தொடர விரும்புகிறேன்" என்று வைஷ்ணவி கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment