close
Choose your channels

விஜய்யின் 'வாரிசு' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 'துணிவு' படக்குழுவினர்களின் திட்டம் என்ன?

Thursday, December 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும் ரிலீஸ் தேதியை இன்னும் இரண்டு படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜனவரி 12 அல்லது 13 ஆம் தேதி ’வாரிசு’ மற்றும் ‘துணிவு’ திரைப்படங்கள் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 'வாரிசு’ படத்தின் பிரிட்டன் ரிலீஸ் உரிமையை பெற்ற அஹிம்சா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் 'வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்சார் சான்றிதழ் வந்த பிறகே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 'துணிவு’ படக்குழுவினர்களின் திட்டம் என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 'துணிவு’ திரைப்படமும் அதே ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா? அல்லது ஒரு நாள் முன்போ பின்போ ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.