விஜய்யின் 'வாரிசு' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 'துணிவு' படக்குழுவினர்களின் திட்டம் என்ன?

விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும் ரிலீஸ் தேதியை இன்னும் இரண்டு படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜனவரி 12 அல்லது 13 ஆம் தேதி ’வாரிசு’ மற்றும் ‘துணிவு’ திரைப்படங்கள் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் 'வாரிசு’ படத்தின் பிரிட்டன் ரிலீஸ் உரிமையை பெற்ற அஹிம்சா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் 'வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்சார் சான்றிதழ் வந்த பிறகே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 'துணிவு’ படக்குழுவினர்களின் திட்டம் என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 'துணிவு’ திரைப்படமும் அதே ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா? அல்லது ஒரு நாள் முன்போ பின்போ ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

More News

சசிகுமார் ஜோடியாகும் 'பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் சசிகுமார் ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திரையுலக ஜாம்பவான்களுடன் செல்பி.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த புகைப்படம்!

தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களுடன் செல்பி எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி .

நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா- தி ரைஸ்': ரஷ்ய மொழி ட்ரைய்லர் வெளியானது!

நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' திரைப்படம் இதுவரை கண்டிராத அளவுக்கு வரவேற்புப் பெற்று, வெற்றிக்கான உதாரணமாகவும் திகழ்கிறது. இந்தத் திரைப்படம் பல மொழிகளில் வெளியான முதல்

பள்ளி மாணவ, மாணவிகளின் பைகளில் ஆணுறை கருத்தடை மாத்திரைகள்: அதிர்ச்சியில் கல்வி அதிகாரிகள்

பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் மனைவி புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வெளிவந்துள்ள நிலையில் கௌதம் மேனனின் மனைவி இவரா? என ஆச்சரியத்தில் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். 

'டிமாண்டி காலனி 2' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு: நாயகி, இசையமைப்பாளர் யார்?

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவான 'டிமாண்டி காலனி' என்ற திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வெறும் 2 கோடி ரூபாய்