டிசம்பர் 4ல் 'வாரிசு' செகண்ட் சிங்கிள்? அன்று என்ன விசேஷம் தெரியுமா

  • IndiaGlitz, [Tuesday,November 22 2022]

தளபதி விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'ரஞ்சிதமே’ சூப்பர் ஹிட்டாகிய நிலையில் அடுத்த சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி டிசம்பர் 4ஆம் தேதி ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக தெரிகிறது. டிசம்பர் 4ஆம் தேதி தான் விஜய் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமான ‘நாளைய தீர்ப்பு’ வெளியானது. கடந்த 1992-ஆம் ஆண்டு இந்த படம் வெளியானதை அடுத்து 30 ஆண்டுகள் விஜய் திரையுலகில் கொடிகட்டி பறப்பதை முன்னிட்டு இந்த பாடல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பாடலில் ’தளபதி’ ’அதிபதி’ ஆகிய வார்த்தைகளும் உள்ளதால் இந்த பாடல் அன்றைய தினம் வெளியாவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கருதியுள்ளனர். விஜய்யின் 30 வருட திரையுலக நாளை கொண்டாடும் ரசிகர்கள் இந்த பாடலையும் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

More News

தயவுசெஞ்சு வெளியே போயிருங்க.. ஷிவினிடம் ஆவேசமாக கூறும் ஏடிகே

மரியாதை இல்லாமல் பேசுவதாக இருந்தால் தயவு செய்து வெளியே போங்கள் என வழக்கறிஞர் கேரக்டரில் நடிக்கும் ஷிவினிடம் நீதிபதி கேரக்டரில் நடிக்கும் ஏடிகே ஆவேசமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் நடிகை பாஜகவில் இருந்து நீக்கம்: அண்ணாமலை அதிரடி அறிக்கை!

 தமிழ் திரையுலகின் நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

படப்பிடிப்பின் கடைசி நாளில் நன்றி கூறிய த்ரிஷா .. வைரல் வீடியோ

த்ரிஷா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அவர் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சுதா கொங்காராவின் அடுத்த படம் ரத்தன் டாடா பயோபிக்? நடிப்பது யார் தெரியுமா?

பிரபல இயக்குநர் சுதா கொங்கரா, ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் ரத்தன் டாடா கேரக்டரில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

'காந்தாரா' உள்பட இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தபட்சம் நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் ஓடிடியிலும்