அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்: சீமான்

  • IndiaGlitz, [Friday,August 30 2019]

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிக்கு அடுத்து திரையுலகில் முதலிடத்தில் விஜய் தான் இருப்பார் என்றும் ரஜினியால் இன்னும் எத்தனை படங்கள் நடிக்க முடியும் என்றும், ரஜினியை அடுத்து அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என அவரது தாய் சொன்னது சரியே என்று கூறினார்.

மேலும் நான் முன்னிலைப்படுத்தித்தான் விஜய் முன்னிலைப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், அவர் ஏற்கனவே முன்னணியில்தான் இருக்கிறார் என்றும் சீமான் கூறினார். இன்னும் ரஜினிகாந்த் ஒரு 4 படங்களில் நடிப்பார்? அதன்பிறகு யார் முதன்மை இடத்தில் இருப்பார்? விஜய்தானே இருப்பார். இரண்டு பேருக்கும் தான் போட்டி உள்ளது. ரஜினிக்குப் பிறகு விஜய்தான் முதன்மை இடத்தில் இருப்பார் என்றும் கூறினார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு 'யார் யாரோ அரசியலுக்கு வருகின்றனர், விஜய் வந்தால் என்ன? வரட்டும் என்று கூறினார்.

வெளிநாடு சென்ற தமிழக முதல்வரின் ஆடை குறித்து கேலி செய்யப்படுவது குறித்த கேள்விக்கு 'அவர்கள் எல்லாம் மனநோயாளிகள்'. வேலை இல்லாதவர்கள் தான் ஆடை குறித்து கிண்டல் செய்வார்கள். என்னதான் இருந்தாலும் என் மண்ணின் முதல்வரை விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார்.

More News

உலகின் முதல் மருத்துவமனை எக்ஸ்பிரஸ் ரயில்: இந்தியன் ரயில்வே அசத்தல்

நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அதிநவீன சிகிச்சையை அளிக்கும் உலகின் முதல் மருத்துவ எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் இயங்கியது. லைஃப்லைன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும்

நீ போயிட்டா நான் ஜாலியா இருப்பேன்! ஷெரினை கலாய்க்கும் தர்ஷன்

கடந்த சில வாரங்களில் அனேகமாக கவின், லாஸ்லியா இல்லாத புரமோஷன் வீடியோ இன்று வெளிவந்துள்ள முதல் வீடியோவாகத்தான் இருக்கும். ஆனாலும் இந்த புரமோவிலும் ரொமான்ஸ் தான் உள்ளது

'விஸ்வாசம்' படத்தின் பாடலுக்கு தமிழக அமைச்சர் பாராட்டு!

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலுக்கு தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் டப்பிங் முடித்துவிட்டு லண்டன் பறந்த தனுஷ்!

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள

பிக்பாஸ் கவின் தாயாருக்கு 7 ஆண்டு ஜெயில்: நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருபக்கம் கவின் தனது காதல் நாடகத்தை தொடர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் கவின் தாயார் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பு அவருக்கு பாதகமாக வந்துள்ளது