'கத்தி' தெலுங்கு ரீமேக்கின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,August 22 2016]

இளையதளபதி விஜய், சமந்தா நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சூப்பர் ஹிட் படமான 'கத்தி' திரைப்படம் தற்போது தெலுங்கில் தயாராகி வருகிறது என்பதும் அதில் விஜய் நடித்த வேடத்தில் தெலுங்கு மெகா ஸ்டார் நடித்து வருவதும் தெரிந்ததே.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திர்கு 'கைதி நம்பர் 150' என்ற டைட்டில் வைக்கப்படுள்ளது. இந்த படத்தில் நாயகனின் இருவேடங்களில் ஒரு வேடம் கைதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் சிரஞ்சீவியின் 150 வது படம் என்பதால் டைட்டிலில் 150 வரும்படி இந்த அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்னும் சில மணி நேரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவி, காஜல் அகர்வால் நடிப்பில் வி.வி.வினாயக் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிவாஜியை அடுத்து கமலுக்கு கிடைத்த சர்வதேச கெளரவம்

உலக நாயகன் என்ற பெயருக்கு ஏற்றவாறு கமல்ஹாசன் பல சர்வதேச விருதுகளை குவித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு பிரான்ஸ்...

செவாலியே விருது எனது பணிக்கான ஊக்கி. கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது அளித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். நடிகர் திலகம் சிவாஜி...

ஜோக்கர்' இயக்குனரின் அடுத்த திட்டம் என்ன? புதிய தகவல்

சமீபத்தில் வெளியான அரசியல் நையாண்டி படமான 'ஜோக்கர்' திரைப்படத்திற்கு எட்டு திக்கில் இருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து...

எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் இவர்தான் : ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் கடந்த பல ஆண்டுகளாக உயிர் நண்பர்களாக இருந்து வருகின்றனர்...

ரஜினியின் டுவீட்டை படித்ததும் கண்ணீர் வந்துவிட்டது. சொன்னது யார் தெரியுமா?

இந்தியாவின் வெள்ளி மங்கை என்று போற்றப்படும் பி.வி.சிந்துவுக்கு பிரதமர் முதல் பாமரர் வரை வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, 'நான் சிந்துவின் ரசிகர்' என்றும் பெருமையுடன் கூறியிருந்தார்.