'பைரவா' முதல் நாள் வசூல். சென்னையை மிஞ்சிய பகுதி பற்றிய தகவல்

  • IndiaGlitz, [Friday,January 13 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தபோதிலும் முதல் நாள் வசூல் அபாரமாக இருந்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் சென்னை வசூல் ரூ.92 லட்சம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்
TK என்று கூறப்படும் திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதியில் 'பைரவா' திரைப்படம் முதல் நாளில் ரூ.80 லட்சம் வசூல் செய்துள்ளது. TT என்று கூறப்படும் திருச்சி, தஞ்சாவூர் பகுதியின் முதல் நாள் வசூல் ரூ.1.6 கோடி ஆகும்., இந்த தொகை முதல் நாள் சென்னை வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் சென்னை மற்றும் TT பகுதி வசூலை விட ரூ.1.7 கோடி முதல் நாளில் வசூல் செய்து சாதனை செய்துள்ளது சேலம் பகுதி. மிக விரைவில் தமிழகத்தின் மிகப்பெரிய வசூல் பகுதியான செங்கல்பட்டு மற்றும் மதுரை, வட ஆற்காடு தென்னாற்காடு பகுதி வசூல் குறித்த தகவல்களை பார்ப்போம்.

More News

போலீஸ் கட்டுப்பாட்டில் அலங்காநலலூர். ஜல்லிக்கட்டு கிராமங்களில் பரபரப்பு

மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.

டி.எம்.செளந்திரராஜனுக்கு மத்திய அரசு செய்த கெளரவம்

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினிகணேசன், நாகேஷ், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்தியராஜ் உள்பட மூன்று தலைமுறை நடிகர்களுக்கு தனது காந்தக்குரலால் ஏராளமான பாடல்களை பாடிய பிரபல பாடகர் டி.எம்.செளந்திரராஜன் நினைவாக மத்திய அரசு ரூ.5 மதிப்பில் தபால்தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முடிஞ்சா குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வாங்க..சீமான்

தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசு தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்

சசிகலாவுடன் பாரதிராஜா, பாக்யராஜ் உள்பட திரையுலக பிரபலங்கள் சந்திப்பு

புரட்சி தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு தமிழ்நாடு திரைப்படத்துறை திட்டமிட்டுள்ளது

முதல்நாள் வசூலில் 'கபாலி', 'தெறி'யை அடுத்து சாதனை படைத்த 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.