close
Choose your channels

விஜய்யிடம் பாராட்டு பெற்ற எதிர்நீச்சல் நடிகை

Thursday, July 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம் செப்.17ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை நந்திதா ஸ்வேதா, தன்னுடைய கேரக்டர் குறித்து சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய்யுடன் நடிக்கவேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று. ஆனால் இவ்வளவு சீக்கிரம் என்னுடைய கனவு நிறைவேறும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. முதன்முதலில் அவருக்கு ஜோடியாக ஒரு சிறு பகுதியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தேன். ஆனால் விஜய் மிகவும் இனிமையான மனிதர். அவர் என்னுடைய பதட்டத்தை போக்கி, எனக்கு ஊக்கமளித்தார்.

நான் நடித்த எதிர்நீச்சல் படத்தை அவர் பார்த்ததாகவும், அதில் என்னுடைய நடிப்பு நன்றாக இருந்ததாகவும் என்னை பாராட்டினார். இந்த படத்தின் ரிலீஸை மற்றவர்களை விட நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி போன்ற வெற்றி படங்களில் நடித்த நந்திதவுக்கு இந்த படமும் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் நந்திதா, கடந்த வாரம் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே, திகில் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.