'வாரிசு' இலவச டிக்கெட் வேணுமா? இதை செஞ்சா போதும்.. விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,January 10 2023]

'வாரிசு’ படத்தின் இலவச டிக்கெட் வழங்கப்படும் என விஜய் மக்கள் இயக்கம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முன்பதிவு ஒருசில நொடிகளில் முடிந்துவிட்ட நிலையில் நாளை இந்த படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் விஜய் மக்கள் இயக்கம் சற்று முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் ரத்த தானம் கொடுத்தால் அவர்களுக்கு 'வாரிசு’ படத்தின் இலவச டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது விஜய் மக்கள் இயக்கம் ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பின் காரணமாக ஏராளமான ரசிகர்கள் ரத்ததானம் கொடுப்பார்கள் என்றும், அதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஒரு சமூக அக்கறையுடன் செயல்பட்டு வரும் விஜய் ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

மக்களின் சூப்பர் ஸ்டார் ரக்சிதா .. சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

சீரியல் நடிகை ரக்சிதா பிக்பாஸ் வீட்டில் 91 நாட்கள் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

பிக்பாஸ் வீட்டில் வனிதா எண்ட்ரியா? அச்சத்தில் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கடந்த சீசன்களின் போட்டியாளர்கள் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில் வனிதா என்ட்ரி ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பாலாவின் 'சேது' பட நாயகி அபிதாவை ஞாபகம் இருக்குதா? குழந்தைகளுடன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

பாலாவின் 'சேது' பட நாயகி அபிதாவை ஞாபகம் இருக்குதா? குழந்தைகளுடன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

உலக அதிசயங்களில் ஒன்றில் கணவருடன் ஹன்சிகா.. செம புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா சமீபத்தில் தனது தொழில் பார்ட்னரை திருமணம் செய்துகொண்ட நிலையில் கணவருடன் தற்போது உலகின் பல நாடுகளை சுற்றி

எவிக்சனுக்கு பிறகு ரக்சிதாவின் முதல் பதிவு.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

 பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் கடந்த வாரம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் அதில் ரக்சிதா வெளியேறுவார் என்று யாருமே எதிர்பாராத நிலையில்