விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் இவர்தான்!

சென்னை மாநகராட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 க்கும் மேற்பட்ட வார்டுகளில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட முடிவு செய்து உள்ளது என்பதும் அதற்கு விஜய் அனுமதி அளித்துள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் இருப்பினும் அதில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 136 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவுச்செல்வி என்ற இளம்பெண் போட்டியிடுகிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் சூழ இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் அறிவுச்செல்வி வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் அடுத்த படத்தில் 'பீஸ்ட்' நாயகி:  இன்று பூஜை!

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க 'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. 

நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்ட பயணம்: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கடிதம்!

சிவகார்த்திகேயன் நடித்த முதல் திரைப்படமான 'மெரீனா' வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை அடுத்து இந்த பத்தாண்டு பயணம் குறித்து ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

சிலம்பம் வீரர்களுக்கு தமிழ் நடிகர் செய்த மகத்தான உதவி!

தமிழர்களின் தற்காப்பு கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டின் வீரர் மற்றும் வீராங்கனைக்கு தமிழ் நடிகர் ஒருவர் மகத்தான உதவி செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சினேகாவின் அம்மாவை பார்த்திருக்கிங்களா? வைரல் புகைப்படம்

சமீபத்தில் நடிகை சினேகாவின் மகள் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகின

பார்த்திபனின் புதிய படத்தில் 3 ஆஸ்கார் பிரபலங்கள்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்கள்