வறுமையில் வாடும் திரையரங்க ஊழியர்களுக்கு விருந்து வைத்து அசத்திய விஜய் ரசிகர்கள்: பரபரப்பு தகவல்
கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திறக்கப்படவில்லை என்பதும் இனி எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவல் இல்லை என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் திரையரங்க ஊழியர்கள் கடந்த நான்கு மாதங்களாக வேலையின்றி வருமானமின்றி கடும் சிக்கலில் உள்ளனர். அவர்களுடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதை பார்த்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்
ஒரு நடிகர், மாஸ் நடிகராக மாறுவதற்கு திரையரங்குகள் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்த விருத்தாச்சலம் விஜய் ரசிகர்கள், விருத்தாசலம் பகுதியில் உள்ள திரையரங்கு ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை காய்கறி மற்றும் வேஷ்டி, சேலை ஆகியவற்றை வழங்கினர். அதுமட்டுமன்றி திரையரங்கு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் மதிய விருந்தும் வைத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா காலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்களுடைய விருப்பத்திற்குரிய நடிகரின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்த திரையரங்கு ஊழியர்களுக்கு மரியாதை செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது