அரியலூர் மாணவி ரங்கீலா கல்விக்கட்டணம். விஜய் ரசிகர்களின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Thursday,September 14 2017]

அரியலூர் மாணவி ரங்கீலாவுக்கு ஆயுர்வேத படிப்பு படிக்க நிதியுதவி செய்வதாக கூறி பின்னர் ஏமாற்றிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட செய்தி கடந்த இரண்டு  நாட்களாக பரபரப்புடன் இருந்தது அனைவரும் அறிந்ததே

இதற்கு விஜய் நற்பணி இயக்கத்தின் சார்பில் ஒரு நீண்ட விளக்கம் கொடுத்ததோடு மாணவி ரங்கீலாவுக்கு உதவி செய்ய இயக்கம் தயாராக இருப்பதாக கூறப்பட்டதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் மாணவி ரங்கீலாவுக்கு ஆயுர்வேத படிப்பு படிக்க ரூ.1.5 லட்சம் கட்டணத்தை இன்று விஜய் நற்பணி இயக்கத்தினர் கட்டியுள்ளதாக புகைப்பட ஆதாரத்துடன் கூறிய செய்தி சற்றுமுன் சமூக இணையதளங்களில் வெளிவந்துள்ளது.

விஜய் நற்பணி இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் கொடுத்த பொய்யான வாக்குறுதியையும் நிறைவேற்றி ஒரு மாணவியின் கல்விக்கு உதவி செய்த விஜய் நற்பணி மன்றத்தினர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

கனடா கல்லூரியில் விஜய்சேதுபதியின் வெற்றிப்படம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித்தா? கமல்ஹாசனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

முதன்முதலாக பிகினி உடையில் பிரபல நடிகை

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'ஆடுகளம்' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்த வைத்த நடிகை டாப்சி, அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர், உள்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

'துப்பறிவாளன்' முதல் ஆரம்பமாகும் விஷாலின் 'ஒரு ரூபாய்' திட்டம்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவுடன் விஷால் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று விவசாயிகளின் 'ஒரு ரூபாய்' திட்டம்.

அரியலூர் மாணவி ரங்கீலா விவகாரம்: விஜய் நற்பணி மன்றம் விளக்கம்

தளபதி விஜய் மாணவர்களின் கல்வி உள்பட பல்வேறு உதவிகளை விளம்பரம் இன்றி செய்து வருகிறார் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும்