தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

  • IndiaGlitz, [Tuesday,April 18 2017]

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா சற்று முன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். லண்டனில் தங்கியிருந்த விஜய்மல்லையா ஸ்காட்லாந்துயார்டு போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அந்த வழக்கில் இருந்து தப்பிக்க தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி செய்தது. ஆனால் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற இங்கிலாந்து அரசு, தனது நாட்டின் சட்டவிதிகளை காரணம் காட்டி மறுத்துவிட்டது.
இந்த நிலையில் இண்டர்போல் உதவியை நாடிய மத்திய அரசு விஜய்மல்லையாவை கைது செய்யும் வகையில் ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்ப கேட்டுக்கொண்டது. இதுகுறித்து இண்டர்போல் கேட்ட ஆதாரங்களையும் மத்திய அரசு சமர்ப்பித்தது.
மத்திய அரசின் ஆதாரங்களின் அடிப்படையில் சற்று முன்னர் விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்துயார்டு போலீஸார் கைது செய்தனர். அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

என் மூன்று குழந்தைகளுக்காக உயிர் வாழ்கிறேன். மைனா நந்தினி

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரும் அறிந்ததே. கார்த்திக் தற்கொலைக்கு நந்தினியின் தந்தைதான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றையும் சுரண்டிவிட்டீர்கள். இதையாவது விட்டு வையுங்கள். கவிஞர் தாமரை வேண்டுகோள்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகின்றது. குறிப்பாக இன்றும் நாளையும் மதிய நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு எச்சரிக்கும் அளவுக்கு வெயிலின் கொடுமை உள்ளது...

ஜெயலலிதா, கலைஞர் யாருடைய ஆட்சியும் சரியில்லை. ராஜ்கிரண்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் ஒரு குழப்பமான நிலையை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் எந்த கருத்தையும் துணிச்சலாக பதிவு செய்யும் நடிகர் ராஜ்கிரண், தமிழக அரசியல் குறித்து பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆட்சியும் சரியில்லை என்று

சசிகலா குடும்பம் அதிமுகவில் இருக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது. ஓபிஎஸ் திட்டவட்டம்

நேற்று மாலை முதல் இரண்டாக பிரிந்திருக்கும் அதிமுக மீண்டும் ஒன்றிணையவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டு வருகிறது...

ரஜினிக்கு அரசியல் தெரியாது. சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில மாதங்களாகவே தமிழர்களுக்கு எதிராகவும், ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு எதிரகாவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்....