'கடுகு' சிறுத்தாலும் காரம் குறையாத ஓப்பனிங் வசூல்

  • IndiaGlitz, [Monday,March 27 2017]

சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ள 'கடுகு' திரைப்படம், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழியை நிரூபித்துள்ளது.

'கோலி சோடா', '10 என்றதுக்குள்ள' படங்களை அடுத்து விஜய் மில்டன் இயக்கியுள்ள 'கடுகு' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த படம் சென்னையில் கடந்த வார இறுதியில் 15 திரையரங்க வளாகங்களில் 90 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.21,30,860 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

More News

எங்கிட்டே மோதாதே - பாம்புச்சட்டை படங்களின் ஓப்பனிங் வசூல் விபரங்கள்

நட்டி நட்ராஜ் நடித்த 'எங்கிட்டே மோதாதே' மற்றும் பாபிசிம்ஹா-கீர்த்திசுரேஷின் 'பாம்புச்சட்டை' ஆகிய படங்கள் ரிலீசுக்கு முன்னர் ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கலவையான விமர்சனம் காரணமாக சராசரி ஓப்பனிங் வசூலையே பெற்றுள்ளது...

தலைவர் ரஜினி குறித்து தவறாக பேசுவதா? ராகவா லாரன்ஸ் ஆவேச அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்து அதுகுறித்து ஒரு விளக்க அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். ரஜினியின் இலங்கை பயண ரத்துக்கு சுப்பிரமணியன் சுவாமி உள்பட ஒருசில அரசியல்வாதிகளும், சமூக வலைத்தள பயனாளிகளும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகர்கரும், நடிகர், இய

மூன்றாவது வாரத்திலும் முன்னிலை வசூல் பெற்றுள்ள 'மாநகரம்'

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் இளையதலைமுறை இயக்குனர்கள் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி திரைப்படங்களை உருவாக்குவதால் முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அவர்களுக்கு அமைந்து வருகிறது...

ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் நயன்தாரா, த்ரிஷா ஆகிய நடிகைகள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வரும் நிலையில் ஜோதிகாவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் தான் 'மகளிர் மட்டும்'...

அஜித் ரசிகர்களின் ஆதரவால் கலக்கிய 'கட்டமராயுடு' ஓப்பனிங் வசூல்

தெலுங்கு மாநிலங்களில் பவர்ஸ்டர் பவன்கல்யாண் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு புதியவர்...