விஜய் அம்மாவுக்கு கிடைத்த BMW சொகுசு கார் பரிசு.. இன்று என்ன விசேஷம்?


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய்யின் அம்மா அம்மாவுக்கு இன்று ஒரு BMW கார் பரிசாக கிடைத்துள்ளது. இந்த நிலையில் இன்று என்ன விசேஷம் என்பதை பார்ப்போம்.
தளபதி விஜய்யின் அப்பா, பிரபல இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர், அவருடைய அம்மா ஷோபாவும் திரையுலகில் இருந்தவர் என்பது தெரிந்ததே. அந்த வகையில், எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகிய இருவரும் இன்று 52வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், 52வது திருமண நாளை கொண்டாடும் வகையில், தனது மனைவிக்கு ஒரு விலைமதிப்புள்ள BMW கார் வாங்கி கொடுத்துள்ளதாக எஸ். ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
“எங்களுக்கு கல்யாணம் ஆகி 52 வருடம் ஆகிவிட்டது. இந்த 52 வருடத்தில் எவ்வளவோ பிரச்சனைகள், எவ்வளவோ டார்ச்சர்கள், அத்தனையும் தாங்கிக் கொண்டு ஒரு பெண் என்னோடு வாழ்ந்திருக்கிறார். அதுவும் சந்தோஷமாக! அதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
கல்யாணமான புதுசில் நாம் மனைவிக்கு பரிசு வாங்கி தருவது என்பது சாதாரண நிகழ்வு. ஆனால் 52 ஆண்டு காலம் என்னுடன் வாழ்ந்த என் மனைவிக்கு ஒரு விலைமதிப்புள்ள BMW காரை பரிசாக வாங்கி கொடுத்து உள்ளேன்,” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
…true love is never blind, but rather brings an added light. pic.twitter.com/bSJ9lQ6DPg
— S A Chandrasekhar (@Dir_SAC) April 24, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com