மருத்துவமனையில் விஜய் பட நடிகை.. குளுக்கோஸ் ஏற்றும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Tuesday,January 31 2023]

விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனக்கு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2006ம் ஆண்டு ’கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பிறகு அவர் தெலுங்கில் பிரபலமானார் என்பதும் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நடிக்கார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்துவரும் நிலையில் ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இலியானா, கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து அசத்தி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் அதில் தன்னை டாக்டர்கள் மிகவும் கவனித்து வருவதாகவும் தனக்கு மூன்று பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் தனக்கு என்ன பிரச்சனை என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

ஏன் அவன் பொண்டாட்டி அவனை விட்டு போயிட்டா?  அசீம் ரசிகர்களின் கிண்டலுக்கு பதிலடி கொடுத்த நடிகை!

இதனால தான் உன் புருஷன் உன்னை விட்டு போயிட்டானா? என பிக்பாஸ் அசீம் ரசிகர்கள் நடிகை ஒருவரை தரக்குறைவாக விமர்சனம் செய்த நிலையில் அசீம் பொண்டாட்டி எதனால் அவனை விட்டு போயிட்டா?

அஞ்சலியின் 'ஜான்சி' இணையத்தொடர்: இரண்டாவது சீசன் வெளியீடு

Tribal Horse Entertainment சார்பில்  நடிகர் கிருஷ்ணா வழங்கும்,  இயக்குநர் திரு இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடித்திருந்த “ஜான்சி”  தொடர் முதல் சீசன் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு

'தளபதி 67' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. படக்குழுவினர் யார் யார்?

 தளபதி விஜய் நடிப்பில்,  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ

சிம்புவின் 'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் குஷி..!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும்  'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 என்ன ஆனாலும் சரி, மொத்த பேரையும் கொத்தா தூக்கிருவேன்.. நானி - கீர்த்தி சுரேஷின் 'தசரா' டீசர்

 தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் பிரபல தெலுங்கு நடிகர் நானியுடன் நடித்த 'தசரா' என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.