தம்பியை போலவே அக்காவுக்கும் அரண்மனையில் தான்.. விஜய் நாயகியின் திருமண ஏற்பாடு!

  • IndiaGlitz, [Monday,October 17 2022]

விஜய் படத்தில் நடித்த நடிகையின் சகோதரர் திருமணம் அரண்மனையில் நடந்த நிலையில் அதே அரண்மனையில் நடிகையின் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. இவர் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக விஜய்யுடன் இவர் நடித்த ‘வேலாயுதம்’, ‘புலி’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி என்பவருக்கு கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு அரண்மனையில் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில் அதே அரண்மனையில் ஹன்சிகாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாகவும், இதற்கான அரண்மனையை அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஹன்சிகாவை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என்றும் இது ஒரு பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றும் கூறப்படுகிறது. ஹன்சிகாவின் திருமண தேதி உள்பட மற்ற விவரங்களை ஹன்சிகாவின் குடும்பத்தினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மோகன்லாலில் 'லூசிஃபர்' இரண்டாம் பாகம் உருவாகின்றதா?

 மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'லூசிஃபர்' . இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது என்பது வெறும் 30 கோடி

சன்னிலியோனின் அடுத்த தமிழ்ப்படம்.. 28 ஆண்டுகள் கழித்து இணையும் ஹீரோ-ஹீரோயின்!

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது 'வீரமாதேவி' மற்றும் 'ஓ மை கோஸ்ட்' ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் 'ஓ மை கோஸ்ட்'

 நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே.. நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட விக்ரம்!

முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள், ஆனால் நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ள மாஸ் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இயக்குனர் நட்சத்திரங்கள்!

ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், அஷ்வின் ஆகியோர் தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளனர்.

ஆதித்த கரிகாலன் விக்ரம் வசனத்தை வேற லெவலில் பேசிய துருவ் விக்ரம்: வைரல் வீடியோ

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம் பேசிய வசனங்களை அவரது மகன் துருவ் விக்ரம் அவரை போலவே நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாக பேசிய