கமல்ஹாசனுக்காக பிரச்சாரம் செய்யும் விஜய் பட நடிகை!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக மட்டுமின்றி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடப் போகிறது. இந்த கட்சி ஏதாவது ஒரு கூட்டணியில் இணையுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் தேர்தல் வந்துவிட்டால் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர் நடிகைகள் பிரச்சாரம் செய்து வருவது இயல்பான ஒன்று என்ற நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக விஜய் படத்தில் நடித்த நடிகை ஒருவர் பிரச்சாரம் செய்து வருகிறார்

விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படத்தில் அவருடைய தங்கையாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஜெனிபர். இவர்தான் தற்போது விருகம்பாக்கம் பகுதியில் வீடு வீடாக சென்று மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஒரு மாற்றம் வர வேண்டும் என்பதற்காக ஆண்டவர் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் வழியில் நான் கண்டிப்பா நிற்பேன். அவருக்கு சப்போர்ட் பண்ணுவேன். நடிக்கும்போது அவருக்கு சப்போர்ட் பண்ணேன். இப்போ நடிக்காமல் நல்லது பண்ண வேண்டும் என்று வந்திருக்கும்போதும் நான் அவருக்கு சப்போர்ட் பண்ணுவேன். கமல்ஹாசன் சாருக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்த முறை மாறும். மக்கள் நீதி மய்யத்திற்கு ஓட்டு போடுங்க என்று தெரிவித்துள்ளார்.

More News

பட வாய்ப்புக்காக படுக்கை: ரஜினி, அஜித், விஜய் பட நாயகியின் பகீர் தகவல்!

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்த குற்றச்சாட்டை ஹாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை பலர் கூறியுள்ள நிலையில் இந்த மீடூ குற்றச்சாட்டை ரஜினி, அஜித், விஜய் பட நடிகையும்

இனி 8 போடாமலே டிரைவிங் லைசென்ஸ் வாங்கலாம்… புதிய வரைவு சட்டத்தின் விளக்கம்!

டிரைவிங் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் எல்எல்ஆர் பதிவு செய்து, அதற்கு பின்பு ஆர்டிஓ அதிகாரிக்கு முன்னால் 8 போட்டு காண்பித்த பிறகே லைசென்ஸ் வாங்க முடியும்.

முன்னணி நடிகருடன் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்… வைரல் புகைப்படம்!

பேட்ட படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார்.

'பரியேறும் பெருமாள்' பட நடிகரின் பரிதாப நிலை: திரையுலகம் உதவுமா?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

இப்போதைக்கு எனக்கு பிடிச்சதெல்லாம்… நடிகை அனுஷ்கா சர்மாவின் வைரல் டிவிட்!

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தியக் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் வாரிசு வந்து விட்டது.