8 வருடங்கள், 11 படங்களுக்கு பின்னர் விஜய் படத்திற்கு கிடைத்த மாற்றம்

  • IndiaGlitz, [Saturday,October 07 2017]

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டைட்டில் பிரச்சனை நேற்று நீதிமன்றத்தின் மூலம் முடிந்தது மட்டுமின்றி நேற்றே இந்த படம் சென்சார் செய்யப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த எட்டு வருடங்களாக விஜய் நடித்த 11 திரைப்படங்களுக்கும் 'யூ' சான்றிதழ்களே கிடைத்துள்ள நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் நடித்த படம் ஒன்றுக்கு 'யூஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான 'வேட்டைக்காரன்' படத்திற்குத்தான் 'யூஏ' சான்றிதழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் வெளியான 'சுறா, காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி, தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி மற்றும் பைரவா ஆகிய 11 திரைப்படங்கள் தொடர்ச்சியாக 'யூ' சான்றிதழ் பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதில் இருந்து தமிழக அரசின் வரிவிலக்கு நிறுத்தப்பட்டுள்ளதால் திரைப்படங்களுக்கு ''யூஏ' சான்றிதழ் பெற்றபோதிலும் எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெய்-அஞ்சலியின் 'பலூன்' சென்சார் தகவல்கள்

'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின்னர் ஜெய்-அஞ்சலி மீண்டும் ஜோடியாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பலூன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

விஷாலின் அடுத்த பட சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' சமீபத்தில் வெளியாகி நல்ல வாரவேற்பை பெற்ற நிலையில் விஷாலின் அடுத்த படமான 'வில்லன்' திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்

தமிழ் சினிமாவில் தலையெடுத்து வரும் இரண்டாம் பாக சீசன்

மெர்சல் டைட்டில் வழக்கின் அதிரடி தீர்ப்பு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளிவரும் என்று அனைத்து தகவல்களும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் திடீரென 'மெர்சல்' படத்தின் தலைப்பு தன்னுடையது

ஓடும் காரில் பிறந்த குழந்தைக்கு 5 வருட இலவச பயண சலுகை

கேப் நிறுவனத்தின் கார் ஒன்றில் கர்ப்பிணி பெண் பயணம் செய்து கொண்டிருந்த நேரத்தில் பிரசவ வலி வந்து காரிலேயே குழந்தை பிறந்ததால், தாய் மற்றும் குழந்தை என இருவருக்கும் இலவச பயணம் செய்ய சலுகை