close
Choose your channels

விஜய் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தை இயக்குகிறாரா 'லவ் டுடே' இயக்குனர்?

Tuesday, November 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த திரைப்படத்தை ’லவ் டுடே’ இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வசூலை வாரி குவித்தது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி இந்த படம் சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது என்பதும் அங்கும் வசூலை வாரி குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே பிரதீப் ரங்கநாதனை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர் அணுகியுள்ள நிலையில் தற்போது தெலுங்கு தயாரிப்பாளர்களும் பிரதீப் ரங்கநாதனை அணுகி உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்தை தயாரித்து வரும் தில் ராஜு, பிரதீப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் தயாரிக்கும் அடுத்த படத்தை பிரதீப் இயக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.