AI ஸ்டுடியோ ஆரம்பிக்கும் விஜய் பட தயாரிப்பாளர்.. அடுத்த கட்டத்திற்கு செல்லும் சினிமா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சினிமாவில் AI சம்பந்தப்பட்ட காட்சிகளை உருவாக்க வேண்டும் என்றால் அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் இந்தியாவிலேயே சில AI நிறுவனங்கள் தோன்றி திரை உலகிற்கு சேவை செய்து வருகின்றன.
ஏற்கனவே ஷாருக்கான் ரெட் சில்லி உள்பட ஒரு சில நிறுவனங்கள் டிஏஜிங் உள்பட பல VFX பணிகளை செய்து வரும் நிலையில் தற்போது விஜய்யின் ’வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு AI ஸ்டுடியோ ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து இனி AI சம்பந்தப்பட்ட காட்சிகளின் பணி இந்தியாவிலேயே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தில் ராஜூ ஒரு வித்தியாசமான பார்வையுடன் திரையுலகில் நுழைந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை அளித்தார். இப்போது, அவர் திரைப்படத்தை தாண்டி ஒரு முக்கிய முயற்சி எடுத்துள்ளார். எங்கள் பிளாக்பஸ்டர் தயாரிப்பாளர் தில்ராஜூ @QuantumAIGlobal உடன் இணைந்து AI நிறுவனத்தை அறிமுகப்படுத்துகிறார். மே 4-ஆம் தேதி பெயர் மற்றும் கூடுதல் விவரங்களை அறிவிப்போம் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசன் AI சம்பந்தமான படிப்புகளை படித்து முடித்துவிட்டு அதை சினிமாவில் எப்படி புகுத்துவது என்று ஆலோசனை செய்து வரும் நிலையில் அவரது அடுத்த அடுத்த படங்களிலும் AI டெக்னாலஜி புகுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா உள்பட இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக திரையுலகில் உள்ள பிரபலங்கள் AI டெக்னாலஜியை சினிமாவுக்குள் கொண்டு வருகின்றனர் என்பதும் இதனால் திரையுலகினர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் மிகவும் சிறப்பான அனுபவம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
He started with a vision.
— Sri Venkateswara Creations (@SVC_official) April 16, 2025
He gave us unforgettable stories.
Now, he’s building something beyond cinema.
Our blockbuster producer #DilRaju collaborates with the brilliant minds at @QuantumAIGlobal to launch an AI-powered media company 💥
— https://t.co/6q9grVKCQv
A space… pic.twitter.com/R7R7tQSYWN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com