'குட் பேட் அக்லி' படத்தில் விஜய் படத்தின் ரெஃப்ரன்ஸ்கள்.. தியேட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' என்ற திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சற்றுமுன் முதல் காட்சி தொடங்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் தியேட்டரில் இருந்து பதிவு செய்யப்படும் விமர்சனங்கள் மற்றும் கமெண்ட்கள் வைரலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது என்றும், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தான் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்து இருப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் விஜய்யின் இரண்டு படங்களின் ரெஃபரன்ஸ்கள் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. முதலாவது, 'துப்பாக்கி' படத்தில் இடைவேளையின்போது விஜய் பேசும் வசனமான " “I’m Waiting’ என்ற வசனமும், 'கில்லி' படத்தில் வரும் "காரப்பொரி" ரெஃபரன்ஸாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சிகள் திரையரங்குகளில் திரையிடும் போது, ரசிகர்கள் தெறிக்க விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஏற்கனவே அமெரிக்காவில் முடிந்துவிட்ட நிலையில், பாசிட்டிவ் ரிசல்ட் வந்து கொண்டிருப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கானது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
#ThalapathyVijay’s “I’m Waiting & Ghilli’s Kara Pori” references in #GoodBadUgly — Fans say theatres went WILD! 🔥🔥🔥 pic.twitter.com/gYNfKX8x7k
— KARTHIK DP (@dp_karthik) April 10, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com