close
Choose your channels

ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து விஜய்யின் இன்னொரு சமூக வலைத்தளம்.. ஒரே நாளில் புளூடிக் ..!

Sunday, April 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய்க்கு ஏற்கனவே ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வ கணக்கு இருக்கும் நிலையில் தற்போது அவர் புதிதாக இன்ஸ்டாகிராமிலும் கணக்கு தொடங்கி உள்ளார்

தமிழ் திரை உலக நடிகர்கள், நடிகைகள் மட்டுமின்றி உலகில் உள்ள பல திரையுலக நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தளபதி விஜய் ஏற்கனவே பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளார் என்பதும் இரண்டிலுமே மில்லியன் கணக்கில் அவருக்கு ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கியுள்ளார். அவர் அதில் ஒரே ஒரு போஸ்ட் மட்டுமே போட்டு இருக்கும் நிலையில் அந்த பக்கத்திற்கு புளூடிக் கிடைத்துள்ளது என்பதும் ஒரு சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. லும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் உள்பட பல திரையுலக நட்சத்திரங்களும் ஃபாலோ செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சில முக்கிய தகவல்களை தெரிவித்து வரும் நிலையில் இனி இன்ஸ்டாகிராமில் அது போன்ற தகவல்களை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.