சிறந்த சர்வதேச நடிகர் போட்டியில் 'மெர்சல்' விஜய்

  • IndiaGlitz, [Saturday,July 21 2018]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு ஏற்கனவே ஒருசில விருதுகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது IARA விருதுக்கு சென்றுள்ளது.

இந்த விருதுகள் வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி லண்டலில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் விருதுக்குரிய போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விழாவில் விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் திரையிடப்படவுள்ள நிலையில் இரண்டு விருதுகளுக்கு 'மெர்சல் படத்தில் நடித்த விஜய்யின் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. 'சிறந்த நடிகர்' மற்றும் 'சிறந்த சர்வதேச நடிகர்' ஆகிய விருதுகளுக்கு விஜய்யின் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு விருதுகளும் விஜய்க்கு கிடைக்க நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

More News

'சீமராஜா' டிரைலர்-பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மதுரை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள 'சீமராஜா'

சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்ஹாசன் - விவியன் ரிச்சர்ட்ஸ்

கமல்ஹாசன் நடித்த 'சத்யா' திரைப்படத்தில் அன்றைய பிரபலமாக இருந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் விவியன்  ரிச்சர்ட்ஸ் கெட்டப்பில் நடித்திருப்பார்.

டபுள் விருந்து தரும் நயன்தாரா - விஜய்சேதுபதி?

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில்

ஆகஸ்ட் 15ஆம் தேதியை குறிவைக்கின்றதா 'சீமராஜா'?

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளதாக

என்னை ஏற்று கொள்ள விரும்புபவரை திருமணம் செய்ய தயார்: ஸ்ரீரெட்டி

என்னுடைய பழைய வாழ்க்கையை அறிந்து என்னை விரும்பி ஏற்று கொள்ள முன்வருபவரை திருமணம் செய்ய தயார் என்று ஸ்ரீரெட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.