close
Choose your channels

'தளபதி 67' படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளமே வாங்காத விஜய்? ஆச்சரிய தகவல்!

Saturday, December 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கும் என்றும் அதன் பிறகு இரு நாட்கள் கழித்து இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், கௌதம்மேனன், மிஷ்கின், விஷால், கீர்த்தி சுரேஷ் உள்பட பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுவதால் இந்தப் படத்தின் பட்ஜெட் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய தொகையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் ஒவ்வொரு படத்திற்கும் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் நடிகராக இருந்து வரும் நிலையில் இந்த படத்தில் அவர் சம்பளமாக ஒரு பைசா கூட வாங்கவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சம்பளத்திற்கு பதிலாக அவர் இந்த படத்தில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பெற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட் திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் வருமானதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை சம்பளமாக பெற்று வருகின்றனர் என்றும் தெரிந்ததே. அந்த வகையில் தமிழ் திரையுலகின் முதல் நபராக நடிகர் விஜய் வருமானத்தை அடிப்படையாக கொண்டு ‘தளபதி 67’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos