விசிக புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்.. கூட்டணிக்கு அச்சாரமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், அவரது தலைமையிலான கூட்டணியில் சில அரசியல் கட்சிகள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழா ஒன்றில் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமேதை அம்பேத்கர் புத்தகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் குறித்த சில முக்கிய தகவல்கள் இதில் உள்ளன. இந்த புத்தகத்தில் 28 எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன; அதில் ஒன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது.
2000 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் நவம்பர் 6ஆம் தேதி சென்னையில் வெளியிட இருக்கும் நிலையில், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த புத்தகத்தை வெளியிட, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த விழாவில் விஜய் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டால், தமிழக வெற்றி கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கழகம் இணைந்து 2026 தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments