விஜய் கட்சியின் பெயர் மாற்றம்.. புதிய கட்சி பெயரில் முக்கிய அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,February 18 2024]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளபதி விஜய் ’தமிழக வெற்றி கழகம் ’என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் பெயரில் ‘க்’ வர வேண்டும் என்று பலர் அறிவுறுத்திய நிலையில் அதை சேர்க்க விஜய் முடிவு செய்ததாக ஏற்கனவே வெளியான தகவலை பார்த்தோம்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் சமூக வலைதளத்தில் ‘க்’ சேர்க்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியாயமான குறைகளை சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விஜய் தனது கட்சியை நிர்வாகிகளிடம் கூறியதை அடுத்து கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய பெயரான தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் சற்றுமுன் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றி கழக தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூர் தலைமை நிலைய செயலாளர் அலுவலகத்தில் நாளை அதாவது பிப்ரவரி 19ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது.

நமது கழகத்தின் மாவட்ட தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

More News

வாரிசு நடிகையின் விவாகரத்து முடிவு.. அப்பா எதிர்ப்பு, அம்மா ஆதரவு..!

பிரபல நட்சத்திர ஜோடியின் வாரிசு நடிகை தனது கணவரை பிரிய முடிவு செய்துள்ள நிலையில் அவரது முடிவுக்கு அவரது அம்மா ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ஆனால் அவரது அப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும்

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் கதை அரசியலா? பட்ஜெட் இத்தனை கோடியா?

இயக்குனர் பா ரஞ்சித், விக்ரம் நடித்த 'தங்கலான்' திரைப்படம் ரிலீசுக்கு கிட்டத்தட்ட தயாராக இருந்தாலும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விஜய்யை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிய வெற்றிமாறன்.. 'தளபதி 69' கன்பர்ம்?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69 வது திரைப்படத்தை வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லி, ஹெச் வினோத் உள்ளிட்டோர்களில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த பட்டியலில்

'அமரன்' படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவியின் எமோஷனல் பதிவு.. ராஜ்குமார் பெரியசாமியின் ரியாக்சன்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'அமரன்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில்

வருங்காலத்தில் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும்: பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ்..!

தனது தந்தையை எஸ்பி பாலசுப்பிரமணியன் குரலை தனது அனுமதி இன்றி பயன்படுத்திய பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.