கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க டெக்னாலஜி:  விஜய் அரசியல் கட்சியின் மாஸ் திட்டம்..!

  • IndiaGlitz, [Thursday,February 01 2024]

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் உறுப்பினர்களை புதிதாக சேர்ப்பதற்கு வீடு வீடாக செல்வது அல்லது மிஸ்டு கால் மூலம் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால் விஜய் ஆரம்பிக்க இருக்கும் அரசியல் கட்சி முழுக்க முழுக்க டெக்னாலஜி மூலம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் இந்த கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்காக புதிய செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயலி இன்னும் ஐந்து நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் பெரும்பாலும் இளைய தலைமுறை மற்றும் முதல் முறையாக வாக்களிக்க போகும் இளைஞர்களை குறி வைத்துள்ளதால் இந்த செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் மிகச் சரியானது என்று கூறப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் இளைஞர்கள் செயலிகளை பயன்படுத்துவதால் விஜய்யின் அரசியல் கட்சியும் செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் ரத்த தானம் செய்ய திட்டமிட்டபோது இதேபோன்று ஒரு செயலியை உருவாக்கி ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் அதில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் என்று அறிவித்திருந்தது.

தற்போது அதே முறையை தான் உறுப்பினர்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் விஜய் அரசியல் கட்சி பல நடவடிக்கைகளை டெக்னாலஜி மூலமே செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

ஒரே படத்தில் மனிஷா கொய்ராலா, அதிதிராவ் ஹைத்தி, சோனாக்‌ஷி சின்ஹா, ரிச்சா.. வைரல் வீடியோ..!

பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் அடுத்த படம் ஒரு வெப் தொடராக உருவாகி வருகிறது.  

'நான் எதை செய்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் கேட்டுதான் செய்வேன்': ராஷ்மிகா மந்தனா

 நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில்

'என்னை மன்னித்துவிடுங்கள்': திருமணமான ஒரே வருடத்தில் கதறி அழுத ராஜ்கிரண் வளர்ப்பு மகள்..!

பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா என்பவர், தொலைக்காட்சி சீரியல் நடிகர்  முனீஸ் ராஜா என்பவரை  திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில்

விஜய்யை இனி யாரும் தடுக்க முடியாது.. அரசியல் எண்ட்ரி குறித்து பிரபல இசையமைப்பாளர்..!

தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து திரை உலக சிலர் நெகட்டிவ்வாக விமர்சனம்

படம் முடிந்தவுடன் 5 நிமிடங்கள் விடாமல் எழுந்த கைதட்டல்கள்.. கலைப்புலி எஸ். தாணு வாழ்த்து..!

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் ஒருங்கிணைத்து ரோட்டர்டம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட நிலையில் படம் முடிந்ததும்