ஆகஸ்ட் 15-ல் தல-தளபதி படங்களின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 07 2015]

அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் படத்தின் டைட்டில் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்த டைட்டிலை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


'தல 56' படத்திற்கு 'வெட்டி விலாஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு நாட்களாக சமூக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த டைட்டிலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி படத்தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், அதிகாரபூர்வ டைட்டிலை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யின் 'புலி' படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவரும் என கூறப்பட்டு வரும் நிலையில், அதே நாளில் அஜீத் படத்தின் டைட்டில் அறிவிப்பும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதால் அஜீத்-விஜய் ரசிகர்களிடையே அன்றையை தினம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.