விஜய்யின் 2வது வெற்றிப்படமா புலி?

  • IndiaGlitz, [Wednesday,July 29 2015]

விஜய்-மோகன்லால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜில்லா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று தெலுங்கில் ரிலீஸாகி நல்ல ஓபனிங் வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வெற்றியின் காரணமாக விஜய் தற்போது நடித்து முடித்துள்ள 'புலி' படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் தெலுங்கில் இந்த படம் நல்ல விலைக்கு விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


விஜய் மட்டுமின்றி 'புலி' படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோர் தெலுங்கு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் ஹிட்டான முதல் விஜய் படம் 'ஜில்லா' என்ற பெயரை பெற்றிருக்கும் நிலையில் 'புலி' இரண்டாவது வெற்றிப்படமாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில் 'புலி' படத்தின் பிரஸ்மீட் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளதாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்த பிரஸ்மீட்டில் விஜய் ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு சில அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த படத்தை பி.டி.செல்வகுமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். விஜய் நடித்த படங்களிலேயே இதுதான் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக இணையும் சமுத்திரக்கனி

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பாபிசிம்ஹா மற்றும் பலர் நடித்த 'சூது கவ்வும்' என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமி...

நடிகர் சங்க தேர்தல். சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் கடந்த 15ஆம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விஷால் தரப்பில் இருந்து ஜூலை 15-ந் தேதி...

பரவை முனியம்மாவுக்கு விஷால் உதவி

விக்ரம் நடித்த 'தூள்' என்ற படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல' என்ற பாடலில் சிங்கம் போல் கர்ஜித்த பிரபல பாடகி மற்றும் நடிகை பரவை முனியம்மாவை யாரும்...

'புலி' ஆடியோ விழாவில் இரண்டு சூப்பர்ஸ்டார்கள்?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் 'வானவில் வட்டமாகுதே' சிங்கிள் டிராக் டீசர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது....

இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டாருக்கு மாறிய ஜி.வி.பிரகாஷ்

பிரபல இளம் இசையமைப்பாளரும், நடிகராகவும் விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், தற்போது பென்சில், த்ரிஷா இல்லைனா நயன்தாரா...