புயல் பாதிப்பு எதிரொலி: மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய வேண்டுகோள்..!

  • IndiaGlitz, [Thursday,December 07 2023]

சென்னை உள்பட ஒரு சில மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலராக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாக தளபதி விஜய் தளபதி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

#கைகோர்ப்போம் துயர் துடைப்போம்

More News

கல்யாணம் மிகப்பெரிய பாதுகாப்பு.. அந்த அங்கீகாரம் கிடைச்சா மட்டும் தான் வாழ்க்கை: 'கண்ணகி' டிரைலர்..

அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன் உட்பட 4 முக்கிய பெண் கேரக்டர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட 'கண்ணகி' படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கோடான கோடி நன்றி: முன்னாள் மனைவி ஐஸ்வர்யா படம் குறித்து தனுஷின் நெகிழ்ச்சி பதிவு..!

முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார்.

மழைக்காலத்தில் கஷ்டப்படும் தூய்மை பணியாளர்கள்.. விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவி..!

மழைக்காலத்தில் தூய்மை பணியாளர்கள் கஷ்டப்படுவதை கண்டு விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ரெயின்கோட் உள்ளிட்ட பொருட்களை அளித்து உதவி செய்துள்ளனர்.

சிம்பு, தனுஷின் 50வது படங்களில் உள்ள அபூர்வ ஒற்றுமை..!

 எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போல் 100வது படம் என்பது தற்போதைய மாஸ் நடிகர்களால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது. வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே மாஸ் நடிகர்கள் நடித்து வருவதால் 100வது

மிக்ஜாம் புயல் எதிரொலி: சென்னையில் நாளை திரையரங்குகள் மூடப்படுகிறதா?

மிக்ஜாம் புயல் எதிரொலியாக நாளை சென்னையில் உள்ள திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.