'தளபதி 69' படத்திற்காக விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? இந்தியாவின் நம்பர் ஒன்?


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் இந்தியாவின் நம்பர் ஒன் சம்பளம், வாங்கும் நடிகர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக விஜய்க்கு 275 கோடி மற்றும் ஜிஎஸ்டி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்தியாவில் மிக அதிக சம்பளம் ஆகும் நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தை விஜய் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் நடிகர்களே இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக இருந்த நிலையில் முதல் முறையாக ஒரு தமிழ் நடிகர் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது விஜய் ரசிகர்களுக்கு பெருமையான ஒன்றாக கருதப்படுகிறது.
இருப்பினும் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கும் விஜய் சினிமாவில் இருந்து விலகி மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வருகிறார் என்பதை ஒரு பக்கம் விஜய் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்களுக்கு பெருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments