விக்ரம் வெளியிட்ட இரட்டை வேட ரகசியம்
- IndiaGlitz, [Friday,August 14 2015]
விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' படத்தின் டீஸர் நேற்று இரவு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் சமந்தா நேபாளி நாட்டு பெண்ணாகவும், தமிழ் பெண்ணாகவும் இரு வேடங்களில் நடித்திருப்பதாகத்தான் செய்திகள் இதுவரை வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது, 'முதலில் நேபாள பெண் கேரக்டரில் சமந்தா நடிப்பதாக இருந்தது உண்மைதான். ஆனால் நேபாளத்தில் உள்ள லடாக் பகுதியில் படப்பிடிப்பு நடத்த எங்களுக்கு அனுமதி கிடைக்காததால், அந்த கேரக்டரை வேறுவிதமாக மாற்றிவிட்டோம்' என்று கூறியுள்ளார்.
இந்த படம் குறித்து விக்ரம் கூறியபோது, "இந்த படத்தில் நான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளேன். ஆனால் இரண்டாவது வேடம் குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது என்று கூறிய அவர், சமந்தா இந்த படத்தில் மிகக்கடுமையாக உழைத்துள்ளார். அவருடைய முழு திறமையும் இந்த படத்தில் வெளிப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
தேவர் மகன் ஸ்டைல் மீசையுடன் காணப்பட்ட தோற்றம்தான் விக்ரமின் இரண்டாவது வேடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 21ஆம் தேதி ஆரம்பமாகி 31ஆம் தேதி முடிகிறது. மேலும் அக்டோபர் 21ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.