'தெறி'யின் மகளிர் மட்டும் சிறப்புக் காட்சி

  • IndiaGlitz, [Saturday,April 09 2016]

இளையதளபதி விஜய்க்கு பெண் ரசிகைகள் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கல்லூரி மாணவிகளில் பலர் விஜய் ரசிகைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் படத்தை முதல்நாள் முதல் காட்சியை பார்க்க பெண்களுக்கு ஆர்வம் அதிகம் இருந்தாலும் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் அவர்களால் பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கின்றது.

இந்த சங்கடத்தை தவிர்க்கும் வகையில் காரைக்குடி சத்தியன் திரையரங்கு உரிமையாளர் 'தெறி' படம் ரீலீஸ் ஆகும் முதல் நாளில் காலை 7 மணிக்கு மகளிருக்காக மட்டும் ஒரு சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். இதனால் விஜய் படத்தை முதல்நாள் முதல் காட்சியை பார்க்க விஜய் ரசிகைகளுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

காரைக்குடியை போலவே சென்னை, மதுரை, கோவை உள்பட பெருநகரங்களிலும் பெண்களுக்காக முதல் நாளில் ஒரு காட்சியை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத்தளங்களின் மூலம் ஏற்பட்டு வருகிறது. பெண் ரசிகைகளின் கோரிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஒரே நேரத்தில் ரீமேக் ஆகும் 2 மணிரத்னம் படங்கள்

மணிரத்னம் இயக்கிய வெற்றி திரைப்படமான 'ஓகே கண்மணி' படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகிறது என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்த நிலையில்....

'கோ 2' ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் நடிப்பில் சரத் இயக்கிய 'கோ 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக சற்று முன்னர்..

'வெற்றிவேல்' டிரைலர் விமர்சனம்

'படிக்கலைன்னாலும் நானும் வாத்தியார்தான். அவங்க பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்குறாங்க..நான் பயிருக்கு...

2.0 படத்தின் வில்லன் அக்சயகுமார்

விரைவில் வெளியாகிறது 'தெறி'யின் போனஸ்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் தெறியாக வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின்...