'விஜய் 61' படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்குமா?

  • IndiaGlitz, [Wednesday,March 08 2017]

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுவதால் இந்த படத்திற்கு 'மூன்று முகம்' என்ற டைட்டிலை படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் மூன்று வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், அட்லி என மூன்று பிரபலங்கள் இந்த படத்தில் முதன்முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு 'மூன்று முகம்' டைட்டிலை தவிர வேறு டைட்டில் பொருத்தமாக இருக்காது என்றே கருதப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக டைட்டிலை அறிவிக்கும் வரை பொறுமை காப்போம்

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவும் ரூபன் படத்தொகுப்பும் செய்கின்றனர். 'பாகுபலி' புகழ் விஜயேந்திர பிரசாத் திரைக்கதையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.

More News

'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி நடிப்பில் சாய்ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் தடைகள் பலவற்றை தகர்த்து ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு நாள் முன்னதாகவே அதாவது மார்ச் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

விவசாயிகளின் வீட்டுக்கு சென்று ரூ.1 கோடி பணம் கொடுப்பேன். ராகவா லாரன்ஸ்

தமிழக விவசாயிகளின் நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரியும். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்றும் கர்நாடகம் ஒருபுறம், இருக்கும் நீரை வழிமறிக்கும் கேரளா ஒரு புறம், இதெல்லாம் போதாதென்று குடிநீருக்கே கஷ்டப்படும் அளவுக்கு பொய்த்துவிட்ட மழை ஒருபுறம் என்று பல விவசாயிகளை தற்கொலை எண்ணத்திற்கு கொண்டு செ

விக்ரம்பிரபுவின் 'சத்ரியன்' சென்சார் தகவல்கள்

இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விக்ரம் பிரபு நடிப்பில் 'சுந்தரபாண்டியன்' இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சத்ரியன்'.

இசைத்துறையில் காலடி எடுத்து வைக்கும் சூர்யா

தமிழ் சினிமாவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சூர்யா, நடிப்பு மட்டுமின்றி 2D எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தரமான திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த '36 வயதினிலே', 'பசங்க 2' ஆகிய இரண்டு தரமான படங்களாகவும், '24' திரைப்படம் மாஸ் படமாகவும் அமைந்தது...

மீனவர் பலி விவகாரம். தமிழர்களை கேவலப்படுத்தும் சுவாமி

இன்று அதிகாலை தமிழக மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூடு காரணமாக பலியான சோகத்தில் மீனவர்களும் தமிழக மக்களும் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் இன்னொரு புறம் பாரதிய ஜனதா முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளது பெரும் சர்ச்சை