'மெர்சல்' படத்தின் 'மெலடி' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 16 2017]

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஆளப்போறான் தமிழன்' பாடல் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் ஒரு சுனாமியை கிளப்பி தற்போதுதான் ஓய்ந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் இன்னொரு பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு ஒருசில வினாடிகளுக்கு முன் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மெலடி பாடலான 'நீதானே' என்ற பாடல் வரும் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமா ருக்மணி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மெலடி பாடல்கள் கம்போஸ் செய்வதில் வல்லவரான ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மேலும் ஒரு மெலடி பாடலாக விளங்கும் 'நீதானா' பாடலை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News

கமல்ஹாசனை ஒருமையில் விமர்சித்த மேலும் ஒரு அமைச்சர்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு மீது வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வரும் அமைச்சர்கள் கமல்ஹாசனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமான கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு அவரை ஒருமையிலும் விமர்சித்து வருகின்றனர்.

மூன்றாம் பிறை' ஸ்ரீதேவிக்கு இணையான கேரக்டர்: பலூன் பட நடிகை பெருமிதம்

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய்-அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள 'பலூன் திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. 'எங்கேயும் எப்போதும்' படத்திற்கு பின் மீண்டும் இணைந்து நடித்துள்ள ஜெய்-அஞ்சலி ஜோடி நிஜத்திலும் ஜோடியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார் பிரபல நடிகை!

ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் பல பார்வையாளர்கர் பாதியில்  வெளியேறியிருப்பார்கள். அந்த அளவுக்கு சலிப்பு தரும் காட்சிகள் இருந்தது...

மாநில அரசை விமர்சிக்காதது ஏன்? 'தரமணி' இயக்குனர் ராம் விளக்கம்

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த 'தரமணி' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது...

பேசும் படம்: வெள்ளத்தில் மூழ்கினாலும் மூழ்காத தேசிய பற்று

இந்திய மக்கள் மொழி, இனம், மதம், ஜாதி போன்ற பலவகைகளில் பிரிந்து இருந்தாலும் தேசிய ஒருமைப்பாடு என்று வரும்போது அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்பது பல விஷயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது...