ரூ.100 கோடி கிளப்பில் சாதனையுடன் இணைந்தது விஜய்யின் 'தெறி'

  • IndiaGlitz, [Friday,April 22 2016]

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆன 'தெறி' திரைப்படத்தின் தமிழக வசூல் ஒரே வாரத்தில் ரூ.47 கோடி ஆனது என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் தமிழகம் மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் நல்ல கலெக்ஷன் ஆனது என்பதையும் பார்த்தோம்,

இந்நிலையில் 'தெறி' திரைப்படம் ரிலீஸ் ஆகி ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.விஜய்யின் 'கத்தி' திரைப்படம் 14 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த நிலையில் தெறி' ஒரு வாரத்திற்குள்ளே ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. மிகக்குறுகிய நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ்த்திரைப்படம் என்ற சாதனையை ஏற்படுத்தியது மட்டுமின்றி ரூ.100 கோடி வசூல் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் என்ற பெருமையும் அட்லிக்கு கிடைத்துள்ளது.

'தெறி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்ததை விஜய்யின் சமூக வலைத்தளம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது வாரமாக பெரும்பாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக 'தெறி' திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் இந்த படம் வசூலில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிம்புவுக்கு கவுதம் மேனன் கொடுத்த ரோல் என்ன?

சமீபத்தில் சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு மற்றும் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ்லீ' படத்தின் படப்பிடிப்பு ஒரே ஸ்டுடியோவில் ....

ஸ்ருதிஹாசன் என்னை விட மேல். கமல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களே பணிவானவர்தான். ஆனால் அவர் வீட்டில் இருந்து வந்துள்ள விக்ரம்பிரபு அவரைவிட பணிவானவர் ....

சிம்புவை வெளியேற விடமாட்டேன் - நாசர்

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவது குறித்து நேற்று வந்த செய்தி குறித்து நடிகர் சங்கத்தலைவர் நாசர் கூறியபோது, 'சங்கத்தில் இருந்து சிம்பு விலகுவதாக ஊடகங்களில் ....

சசிகுமாரின் வெற்றிவேலுடன் இணையும் சமுத்திரக்கனி

சசிகுமார், மியா ஜார்ஜ் நடித்த 'வெற்றிவேல்' திரைப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது. லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடும்...

சிம்புவுக்கு ராதிகா கூறிய அறிவுரை

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவடைந்ததில் இருந்து புதிய நிர்வாகிகளிடம் நடிகர் சிம்பு கருத்துவேறுபாடுகளுடனே இருந்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை....