close
Choose your channels

விஜய்யின் பள்ளி பருவ புகைப்படம்: பக்கத்தில் இருப்பது யார் யார் தெரியுமா?

Sunday, May 9, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும்போது திருவிழா போல் அவருடைய ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது தெரிந்ததே. சமீபத்தில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய வசூலைக் குவித்த படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் குறித்த செய்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து வைரலாகி வரும் நிலையில் சற்று முன்னர் அவர் பள்ளிப் பருவத்தில் இருந்த போது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது

இந்த புகைப்படத்தில் அவரது பள்ளிப் பருவத்து நண்பர்கள் மற்றும் தோழிகள் உள்ளனர். குறிப்பாக பெண் தோழிகள் மத்தியில் விஜய் அமைதியாக உட்கார்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தளபதி விஜய் தற்போது ’தளபதி 65’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz