close
Choose your channels

அப்துல்கலாம் கனவை நனவாக்க முயற்சித்த மாணவிக்கு விஜய்சேதுபதி உதவி!

Tuesday, June 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சினிமாத்துறையினர்களுக்கு மட்டுமின்றி சினிமாவையும் தாண்டி பலருக்கு உதவி செய்துள்ளார் என்பது அவ்வப்போது வெளிவரும் செய்திகளில் இருந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் விண்வெளி துறை குறித்த படிப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு தக்க சமயத்தில் விஜய்சேதுபதி உதவி செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள தேனியில் அரசு பள்ளியில் படித்த உதயகீர்த்தனா என்ற மாணவி சமீபத்தில் உக்ரைன் நாட்டில் ஏர்கிராப்ட் எஞ்சினியரிங் படிப்பை முடித்தார். அப்துல் கலாம் அவர்களால் ஈர்க்கப்பட்ட இந்த மாணவி அவருடைய கனவை நனவாக்கும் வகையில் விண்வெளியில் புதிய சாதனை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் படித்து வந்தார்

இந்த நிலையில் அவருக்கு போலந்து நாட்டில் விண்வெளி குறித்த பயிற்சியில் இடம்பெற அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் போலந்து நாட்டிற்கு செல்ல அவரிடம் பண வசதி இல்லை. இதனை கேள்விப்பட்ட விஜய்சேதுபதி உடனடியாக தனது உதவியாளர்கள் மூலம் கீர்த்தனாவுக்கு தேவையான பணம் உள்பட அனைத்து உதவிகளையும் செய்ததுடன் கீர்த்தனாவுடன் போனில் பேசி அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தார். தற்போது கீர்த்தனா விஜய்சேதுபதியின் உதவியால் தனது வாழ்நாள் கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.