close
Choose your channels

உதயநிதியை முதல்முதலாக பார்க்கின்றேன்: விஜய்சேதுபதி நெகிழ்ச்சி

Thursday, February 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தை சமீபத்தில் பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதி கூறியதாவது:

எல்லாருக்கும் வணக்கம்...இப்பதான் இயக்குனர் சீனு ராமசாமி சார் இயக்கத்துல, உதயநிதி ஸ்டாலின் சார் நடிச்ச கண்ணே கலைமானே படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான, அழகான ஒரு திரைப்படம். நல்ல இன்பர்மேஷன் இருக்கு. அன்பு பத்தின அழகான பார்வை இந்த படம். உதய் சார் சூப்பரா நடிச்சுருக்காரு.. ரொம்ப நல்லா நடிச்சுருக்கார். நான் பர்ஸ்ட் டைம் அவர இப்படி பாக்குறேன். ரொம்ப நிதானமா, ரொம்ப அழகா நடிச்சுருக்கார். வடிவுக்கரசி அம்மா, தமன்னாவா இருக்கட்டும் , "பூ" ராமு சாரா இருக்கட்டும்...எல்லாருமே ரொம்ப நல்லா நடிச்சுருக்காங்க... ரொம்ப அழகான படம்.. ரொம்ப நல்ல வசனம். ரசிச்சு பார்க்க வேண்டிய ரொம்ப அழகான திரைப்படம். நன்றி என கூறியுள்ளார்.

சீனுராமசாமி இயக்கியுள்ள அடுத்த படமான 'மாமனிதன்' படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.