close
Choose your channels

பிரபல காமெடி நடிகருக்கு அப்பாவாக நடிக்கின்றாரா விஜய்சேதுபதி?

Sunday, February 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி எந்தவித இமேஜூம் இல்லாமல் எந்த வேடமாக இருந்தாலும் நடிப்பார் என்பதும் அந்த வேடத்தில் தனது தனி முத்திரையைப் பதித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரபல காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அந்த படத்தில் சூரியின் தந்தையாக விஜய்சேதுபதி நடித்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது

ஏற்கனவே ’ஆரஞ்சு மிட்டாய்’ என்ற திரைப்படத்தில் வயதான கேரக்டரில் நடித்து இருந்த விஜய் சேதுபதி தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருபக்கம் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல மொழிகளில் மாஸ் காட்டி வரும் விஜய் சேதுபதி இன்னொரு பக்கம் காமெடி நடிகர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படத்திற்கு அப்பாவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.