அட்லியின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி? இன்னொரு ஆச்சரியமும் இதில் உண்டு..!

  • IndiaGlitz, [Wednesday,April 03 2024]

பிரபல இயக்குனர் அட்லியின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஷாருக்கான், நயன்தாரா நடித்த ’ஜவான்’ படத்தை இயக்கிய இயக்குனர் அட்லி, தற்போது அல்லு அர்ஜுன் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் என்ற நிறுவனத்தின் சார்பில் ஒரு சில திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதில் ஒன்றுதான் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படம் என்பது கூறப்படுகிறது.

இந்த தகவலில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தை இயக்குபவர் பாலாஜி தரணிதரன் என்பதுதான். இவர் ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பிறகு ’சீதக்காதி’ ‘ஒரு பக்க காதல்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விஜய் சேதுபதி படத்தை அவர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

More News

ஹாலிவுட்டின் 'ஜோக்கர் 2': சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட வார்னர் பிரதர்ஸ்..!

கடந்த 2019 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்தியாவில் கூட தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகி பெரும் வசூலை குவித்தது

சமூக ஊடகத்தில் பெண்ணியம் குறித்து தனது கருத்தைப் பேசிய சில பிரபலங்கள்.

இன்றைய வளர்ந்து வரும் உலகில் குறிப்பாக நமது சமுதாயத்தில் எத்தனையோ வரையறைகள் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன அதே சமயத்தில் திணிக்கவும் படுகின்றன...........

💰பணம் சேர, சொந்த வீடு, நிலம் அமைய எளிய பரிகாரம்! கருங்காலி மாலை ரகசியம்! Agni Ruthran Guruji

ஆன்மீக கிளிட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், ஆன்மீக ஆசிரியர் Agni Ruthran Guruji, பணம் சேர்க்கவும், சொந்த வீடு மற்றும் நிலம் வாங்கவும்

2வது கணவரையும் விவாகரத்து செய்த 'மன்மதன் அம்பு' நடிகை.. தொடர்ந்து நட்பில் இருப்போம் என அறிவிப்பு..!

கமல்ஹாசன் நடித்த 'மன்மதன் அம்பு' உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகை ஒருவர் தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்து விட்டதாகவும்

என்றென்றும் என் ஹீரோ இவர் ஒருவர் மட்டுமே: நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு..!

நடிகை நயன்தாரா 'எப்போதுமே தனது ஹீரோ இவர்தான்' என ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.