விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது இந்த ஒரு படம் மட்டும் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி ஒரு சில படங்களில் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே அவர் தற்போது வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் மற்ற தகவல்கள் உறுதி செய்யப்படாதவை என்றும் அவரது தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ அல்லு அர்ஜுன் நடித்து வரும் ’புஷ்பா 2’ உள்பட ஒருசில படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாகவும் இது குறித்த ஒப்பந்தத்தில் விஜய்சேதுபதி கையெழுத்திட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்படத்தில் மட்டுமே விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் மற்றபடி தெலுங்கு படங்கள் உள்பட எந்த ஒரு படத்திலும் அவர் இதுவரை நெகட்டிவ் ரோல்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ‘புஷ்பா 2’ படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட தகவல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

'விருமன்' லாபத்தை நடிகர் சங்கத்திற்கு கொடுத்த சூர்யா... எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?

சூர்யா தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'விருமன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

பார்சிலோனாவில் பளபளக்கும் கிளாமர், நயன்தாராவா இது? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோனா சென்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பார்சிலோனாவில் இருக்கும் நயன்தாராவின்

எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்: சிம்பு எடுத்த அதிரடி முடிவு!

திரையுலக பிரபலங்கள் பலர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே.

அந்த கதை சூர்யாவுக்கு மட்டும் தான்.. அவருக்காகவே எழுதினேன்: லோகேஷ் கனகராஜ்

அந்த கதை அவருக்காகவே எழுதியது என்றும் அதில் சூர்யா கண்டிப்பாக விரைவில் நடிப்பார் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ரஜினி-ஷங்கரின் 'சிவாஜி' இரண்டாம் பாகமா? ஏவிஎம் சூப்பர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் 'சிவாஜி'. இந்த திரைப்படம் கடந்த 2007ஆம் ஆண்டு