விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் 'பாட்ஷா' கனெக்சன்?

  • IndiaGlitz, [Wednesday,December 26 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த '96' மற்றும் 'சீதக்காதி' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'மாமனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் ஆட்டோ டிரைவர்கள் அணியும் காக்கி உடையுடன் கூடிய விஜய்சேதுபதியின் செல்பி ஸ்டில் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆட்டோ டிரைவர் வேடம் என்றாலே உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது 'பாட்ஷா' படம் என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் 'ரஜினியுடன் 'பேட்ட' படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய்சேதுபதி, அடுத்ததாக ரஜினி நடித்த ஆட்டோ டிரைவர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'விஸ்வாசம்' படத்தின் அடுத்த அசத்தலான அப்டேட்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் சென்சார் சென்று 'யூ' சான்றிதழ் பெற்றுளது

க்ரைம் படங்கள் இயக்க மிஷ்கினுக்கு தடை ஏன்? ஹீரோ விளக்கம்

பிரபல இயக்குனர் மிஷ்கின் க்ரைம் த்ரில்லர் படங்களை இயக்க சமீபத்தில் சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இந்த தடையை நீதிமன்றம் வரை சென்று பெற்ற நடிகர் மைத்ரேயா,

அமிதாப்பின் முதல் தமிழ்ப்படம் குறித்த புதிய அப்டேட்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் முதல்முறையாக தமிழில் 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார்

காரண பெயராக்கிய பெரியவர்: நல்லகண்ணுவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வசனமே இல்லாம டீசர் அவ்ளோ பேசுது: விஜய்சேதுபதியிடம் வாழ்த்து பெற்ற படக்குழு

சமுத்திரக்கனி, சுனைனா இணைந்த நடித்த படம் 'சில்லு கருப்பட்டி'. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.