close
Choose your channels

தளபதி விஜய்யின் 'லியோ' படத்தில் மீண்டும் விஜய்சேதுபதி?  மாஸ் தகவல்..!

Tuesday, May 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சமீபத்தில் அவரே விளக்கமளித்தபோது, ‘லியோ’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை உறுதி செய்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி ‘லியோ’ படத்தில் நடிக்கவில்லை என்றாலும் வேறொரு பணியில் இணைந்துள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் திசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் சஞ்சய்தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த் உட்பட பல பிரபலங்கள் நடித்து வருவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து வருவதாகவும் இதனால் இந்த படம் LCU என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் விஜய் சேதுபதி ‘லியோ’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் அவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கும் தகவலில் உண்மையில்லை என்றும் தெரிவித்திருந்தார் இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ‘லியோ’ படத்தில் நடித்து வரும் ஒரு முக்கிய கேரக்டருக்கு விஜய் சேதுபதி தான் குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக அவர் சஞ்சய் தத் கேரக்டருக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள 'லியோ’ படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித் தயாரித்து வருகிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.