'விக்ரம்' படத்தில் விஜய்சேதுபதியை தவிர 6 வில்லன்களா? ஆறு பேரும் யார் யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதியை தவிர 6 வில்லன்களை எதிர்கொள்வதாக கதை அமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் கோவையில் நடைபெறுகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள செய்திகளின் படி இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு மொத்தம் ஆறு சகோதரர்கள் என்றும் விஜய்சேதுபதி மற்றும் அவரது ஆறு சகோதர்களையும் கமல்ஹாசன் எவ்வாறு சந்திக்கின்றார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. விஜய்சேதுபதியின் ஆறு சகோதரர்களாக நடிப்பவர்கள் யார் யார் என்பது விரைவில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.