close
Choose your channels

'நீ தமிழன் தான்ய்யா.. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' டீசர்

Thursday, March 4, 2021 • தமிழ் Comments

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ண ரகுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் அனைவரும் கவரும் வகையில் உள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம்போல் விஜய் சேதுபதி பட்டையை கிளப்பியுள்ளார். மேகா ஆகாஷ் அழகான தோற்றம், மகிழ் திருமேனியின் திடுக்கிட வைக்கும் வில்லத்தனம் மற்றும் விவேக், ரித்விகா உள்பட அனைவரும் அனைவரின் நடிப்பும் திருப்திகரமாக உள்ளது. மொத்தத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் விஜய் சேதுபதியின் வெற்றி பட்டியலில் இணையும் மற்றொரு படம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ்திருமேனி, விவேக், ரித்விகா, மோகன்ராஜா, கரு பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இசக்கி துரை தயாரித்துள்ளார். நிவாஸ் பிரசன்னா இசையில், வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz